விக்ரமின் புதிய களம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விக்ரம் நடிப்பில் கடைசியாக “வீரதீர சூரன்” படம் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் விக்ரமின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இரக்கிறது.

அதன்படி விக்ரம் நடிக்கும் புதிய படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். 96 , மெய்யழகன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்ற பிரேம்குமார் இயக்குகிறார்.

படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து ஐசரி கணேஷ் கூறுகையில் உணர்வுபூர்வமாக கதைகளை கொடுத்த இயக்குனர், பன்முகத் திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற விக்ரம் ஆகியோருடன் இணைந்து படம் தயாரிப்பது மகிழ்ச்சி. தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு படம் காத்திருக்கிறது.

இப்படம் நம் மனதை ஆழமாகத் தொடும் கதைகளத்துடன், பரவசமான நடிப்பை கலந்து சேர்த்த ஒரு புதிய முயற்சியாக உருவாக உள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாகவும் இருக்கப் போகிறது. மேலும் பல ஆச்சரியமான தகவல்களுக்கு காத்திருங்கள் என்றார்.