சேரன்மாதேவி
24.12.2025
சேரன்மாதேவியில் 100 நாள் வேலை சட்டத்திருத்தத்தை கண்டித்து தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், 100 நாள் வேலை திட்டத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட திருத்தத்தை கண்டித்து அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், அந்தச் சட்டத்திற்கு ஆதரவு தந்த அ.தி.மு.கவை கண்டித்தும் நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சேரன்மாதேவி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில், சேரன்மாதேவி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஆ. பிரபாகரன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் சேரன்மாதேவி கிழக்கு முத்துப்பாண்டி என்ற பிரபு மேற்கு முத்துகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட், சேரன்மாதேவி யூனியன் சேர்மன் பூங்கோதை குமார், துணை சேர்மன் ஆனந்தலெட்சுமி, பேரூராட்சித் தலைவர்கள் கோபாலசமுத்திரம் தமயந்தி, மேலச்செவல், அன்னபூரணி ராஜன் பத்தமடை அபிதா ஜமால், சேரன்மாதேவி தேவி அய்யப்பன், கூனியூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி மூலச்சி சீவலமுத்துக்குமார், சேரன்மாதேவி கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் அய்யப்பன், முன்னாள் துணைத் தலைவர் டேவிட் ஸ்டீபன், பேச்சாளர் நெல்லை மணி, மதிமுக ஒன்றிய செயலாளர் குட்டி பாண்டியன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாதவன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் ரவிச்சந்தர், வக்கீல் பாக்கியராஜ், தி.மு.க நகர செயலாளர்கள் சேரன்மாதேவி மனிஷா செல்வராஜ், வீரவநல்லூர் சுப்பையா, கல்லிடை இசக்கி பாண்டியன், மேலச்செவல் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரேம் ஆனந்த் உட்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






