திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றியம், மேல உப்பூரணி கிராமத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க பிரமுகர் திரு.நாராயணன் அவர்கள் காலமானார்.
இதையொட்டி, திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.மருதூர் K.ராமசுப்பிரமணியன் அவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னாரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.பழனி குமார், மாவட்ட பிரதிநிதி மாரி செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் பால்ராஜ் மற்றும் விவசாய அணி தலைவர் ஜெபராஜ், திருவிருத்தான்புள்ளி கிளை செயலாளர் சௌந்தரராஜன், கங்கணான்குளம் கிளைச் செயலாளர் திரவிய ராஜா, கரிசல் கிளை செயலாளர் பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






