கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா

கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா

அம்பை ஜூன்.27

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பாமா தலைமை தாங்கினார்

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் ஆயிஷா வரவேற்று பேசினார்

விழாவிற்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள்
அழகு திருமலை வேல்நம்பி, ஞானம் சாந்தி, எல்சி, ஆகிபோர்
முன்னிலை வகித்தனர்

மேலாண்மை குழு தலைவர் பாத்திமாஸ்ரின் ஆண்டறிக்கை வாசித்தார்

சிறப்பு விருந்தினராக கல்லிடை பேரூராட்சி மன்ற துணை தலைவர் க இசக்கிப் பாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவியர் களுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில், முன்னாள் ஆசிரியை அன்னத்தாய் செல்வம்,முன்னாள் மாணவ-மாணவியர்கள் சங்க ஒருங்கிணைப்
பாளர் மீனாள் நடராஜன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன் முன்னாள் ஆசிரியர் அடைக்கலம்,
மேலாண்மை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் . வாழ்த்துரை வழங்கினார்கள்

விழாவில் பள்ளி மேலான்மை குழு உறுப்பினர்கள் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவியர்கள் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பள்ளி தூதரக குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்

நிறைவாக குழந்தை அருள்பிரகாஷ் நன்றி கூறினார உறுப்பினர் ரசாக் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்