அம்பை காசிப நாதசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

அம்பை காசிப நாதசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

அம்பை மார்ச் 26

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை காசிநாத சுவாமி கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாக திகழ்கிறது. இந்து கோவிலில் 2009 -ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணிகள் நடைபெற்று இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவாரம் மூர்த்திகளுடன் கூடிய மரகதாம்பிகை உடனுறை காசிநாத சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

காலை முதலே யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்த நிலையில் 5 – கட்டங்களாக நடை பெற்ற யாகங்களின் நிறைவில் கோபுர கும்பங்களுக்கு தெளிக்க கூடிய புனித நீரானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர விமானங்களுக்கு
பூஜைகளுடன் புனித நீர் ஊற்றப்பட்டது.
மேலும் கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது டிரோன் மூலமாக புனித நீர் தெளித்தனர்.

இந்த விழாவில் அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரனான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக அம்பாசமுத்திரம் காவல் துறை சார்பில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

17-ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் விழா என்பதால் கல்லிடைக்குறிச்சி , அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் மன்னார் கோவில் ,ஊர்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.