அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், SST-2 Team-3 குழுவினர் வாகன தணிக்கையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று 23.03.2026 (மாலை 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை) SST-2 Team-3 குழுவினர் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றுப் பாலம் தெற்கு பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 1,00,000 (ஒரு லட்சம்) கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த பணத்தை கொண்டு சென்ற கயத்தாறு தெற்கு ஆத்திகுளம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த திரு ப.சுப்பையா என்பவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






