மாஞ்சோலை மக்களின் வாக்குரிமை: ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறதா?

மாஞ்சோலை மக்களின் வாக்குரிமை: ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறதா?

​திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம்
சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் கடும் கண்டனத்திற்குரியது.

​உண்மை நிலை என்ன?

​மாஞ்சோலை மக்கள் தங்களின் வாக்குரிமையை உறுதி செய்யக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையாக படிவம் 6 சமர்ப்பித்தனர். விண்ணப்பித்த 635 நபர்களில், இன்று (09-04-2026) வெறும் 213 பேருக்கு மட்டுமே வாக்குரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 422 வாக்காளர்களின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

​எமது கேள்விகள்:
​கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மாஞ்சோலை மக்களுக்கு, இந்த முறை மட்டும் வாக்குரிமை மறுக்கப்படுவது ஏன்?
​635 விண்ணப்பங்களில் 213 பேரை மட்டும் அங்கீகரித்துவிட்டு, மீதமுள்ள 422 பேரை நிராகரிப்பதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சூழ்ச்சி என்ன?

மாஞ்சோலை மக்கள்
இந்தியக் குடிமக்கள் இல்லையா?
அல்லது அவர்கள் வேறு தேசத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களா?

​”வாக்குரிமை என்பது இந்தியக் குடிமக்களின் பிறப்புரிமை. அதைத் தட்டிப்பறிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இழைக்கப்படும் துரோகம்.”

கண்டனக்_குரல்
​தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் மாஞ்சோலை மக்களுக்கு, தார்மீக ரீதியாக வழங்கப்பட வேண்டிய வாக்குரிமையை மறுப்பது என்பது ஒருவித “அரச பயங்கரவாதம்” ஆகும். ஒரு எளிய பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தைச் சிதைக்கும் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை வன்மையாகக் கண்டிக்கிறது.

எமது கோரிக்கை:​

இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். விடுபட்டுள்ள 422 மாஞ்சோலைத் தமிழர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்.
காலம் தாழ்த்தும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறோம்.

தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை-தமிழ்நாடு