அம்பை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக வாய்ப்பு கேட்டு டாக்டர் ரா. ஞானசோமராஜ் அறிவிப்பு

அம்பை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக வாய்ப்பு கேட்டு டாக்டர் ரா. ஞானசோமராஜ் அறிவிப்பு
“தலைமை வாய்ப்பு வழங்கினால் கழக வெற்றியை தலைவர் கரத்தில் கொடுப்பேன்” – உறுதி

அம்பாசமுத்திரம், மே 28:
அம்பை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கழகத்தின் தீவிர தொண்டரும் சமூக சேவகருமான டாக்டர் ரா. ஞானசோமராஜ் தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“அம்பை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட நான் விருப்பம் தெரிவித்துள்ளேன். கழக தலைமை எனக்கு வாய்ப்பு வழங்கினால், மக்களின் நம்பிக்கையை பெற்று, எதிரணி வேட்பாளர் இசக்கி சுப்பையாவை தோல்வியடைய செய்து, கழகத்தின் வெற்றியை தலைவர் கரங்களில் ஒப்படைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “நான் கழகத்தின் முரட்டுத் தொண்டனாகவும், நீண்டகால சமூக சேவகராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்து தீர்வு காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் ரா. ஞானசோமராஜ், முன்னாள் பாளை நகர கூடுதல் துணைச் செயலாளராகவும், முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட பிரதிநிதியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த இவர், கழகத்தின் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல், ஏற்கனவே சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டிருந்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.