அம்பை தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்
அம்பை ஜூன் 15.
அம்பைத் தமிழிலக்கியப் பேரவையின் ஜூன் திங்கள் கூட்டம் கண்ணதாசன் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
பேரவைத் தலைவர் நீ.அய்யப்பன் தலைமை ஏற்றார்.
மூ.அணஞ்சி முன்னிலை வகித்தார்.
பா.கீதா ஆறுமுகம் இறைவாழ்த்துப் பாடினார்.
பேரவைப் பொருளாளர் அரிமா பாரதி கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
செயலர் ச.இலட்சுமணன் அறிக்கை வாசித்தார்.
பொறியாளர் பு.அருமைராஜ் குறள் விளக்கம் கூறினார்.
திருவருள் லத்தீப் இன்றைய சிந்தனை வழங்கினார்.
சொற்சுடர்’ சேரை ப.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,
நீயே உனக்கு என்றும் நிகரானவன் எனும் தலைப்பில் கண்ணதாசன் பற்றி சிறப்புரை வழங்கினார்.
மு.இளங்கோ சிறப்பு விருந்தினரிடம் நூற்பரிசு பெற்றார்.
கவிஞர்கள் அ.முருகன், ஐ.லெட்சுமணன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
சுப்பையா கம்பர் வாழ்த்துக் கவிதை அளித்தார் .
சோம.மகாலிங்கம் நோக்கர் உரை வழங்கினார்.
பு.நாறும்பூநாதன் திருக்குறள் அறக்கட்டளை கூட்ட நிகழ்வு குறித்து அறிவிப்புச் செய்தார்.
எஸ்.கலையரசு நன்றி கூறினார்.
பேரவைத் துணைச் செயலர் பேரா.பா.செந்தில் குமரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.
பேரவைப் புரவலர்களும் திரளான தமிழ் ஆர்வலர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பேரவைப் புரவலர்கள் வீ.சங்கரநாராயணன்,சோம.மகாலிங்கம்,
மூ.அணஞ்சி
ஆகியோர் அனைவருக்கும் விருந்தளித்துச் சிறப்பித்தனர்.






