சேரன்மகாதேவி வட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சேரன்மகாதேவி வட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

அம்பாசமுத்திரம், ஏப். 2 –
225 அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, சேரன்மகாதேவி வட்டத்தில் மதிய உணவு திட்ட பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்த நிகழ்வில், முதலில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டு, அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உறுதியை எடுத்தனர். தொடர்ந்து, சேரன்மகாதேவி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணி தொடங்கப்பட்டது.

பேரணியை சேரன்மகாதேவி சார் ஆட்சியரும், 225 அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர், சேரன்மகாதேவி வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களிடம் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.