அம்பையில் திருக்குறள் விழா

அம்பையில்
திருக்குறள் விழா

அம்பை ஜூன்.17

நெல்லை மாவட்டம்
அம்பாசமுத்திரம் திருக்குறள் அறக்கட்டளையின் ஆனித் திங்கள் குறள் விழா அம்பாசமுத்திரம் வேல்ச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது

கம்ப சித்திரங்கள் அரங்கிற்கு அறக்கட்டளைச் செயலர் பேராசிரியர் சிவசங்கர் தலைமை ஏற்றார் அரசியர் ஐவர் என்ற பொருளில் மயன்மகள் என்ற தலைப்பில் மண்டோதரி பற்றி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் பேராசிரியர் கண்ணகி உரை வழங்கினார்

தொடர்ந்து பன்முக வள்ளுவம் என்ற பொருளில் நடைபெற்ற மகளிர் அரங்கிற்கு கீதா ஆறுமுகம் தலைமையற்றார் பேராசிரியை கண்ணகி முன்னிலை வகித்தார் செல்வி ஸ்ரீநிதி இறைவணக்கம் பாடினார் அகத்தியர் பட்டி இசக்கியம்மாள் குறள் இறை வாழ்த்து கூறினார் ஆசிரியர் அருணா வரவேற்புரை வழங்க விஜயலட்சுமி அறிக்கை வாசித்தார்

வான் புகழ் வள்ளுவத்தில் கடவுளர்கள், விலங்குகள், பறவைகள் ,மலர்கள் கனிகள்
,தொழில்கள் என்ற தலைப்புகளில் செல்வி சுப்புலட்சுமி, பேராசிரியர் கவிதா, ஆசிரியர் கடையம் அனிதா ஷிஃபா லில்லி ,பேராசிரியர் சிவ பார்வதி, மாரியம்மாள், அனுசுயா ஆகியோர் உரைகள் வழங்கினர
அகத்தியர் பட்டி சங்கரி நன்றி கூறினார் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அகத்தியர் பட்டி லட்சுமணன் விருந்து வழங்கினார்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை புன்னைவன நாறும்பூ நாதன் செய்திருந்தார் கூட்டத்தில் பொறியாளர் அருமைராஜ், மருத்துவர் ஆனந்த ஜோதி ,அந்தோணி ராஜ் ,அன்னதாய், ஆறுமுகம் ,உலகநாதன் சிவஹரி பிரம்மசங்கர் ,முருகன், இளங்கோ, பாலகிருஷ்ணன், சதாசிவம் அலெக்சாண்டர், முத்தையா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆடித் திங்கள் குறள் விழாவை மருத்துவர் அரங்கமாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது