அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் இசக்கி சுப்பையா வேட்புமனு தாக்கல்
திருநெல்வேலி, ஏப்ரல் 4:
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் இசக்கி சுப்பையா M.A., M.L., Ph.D., அவர்கள் இன்று (04.04.2026) சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் கழக அமைப்புச் செயலாளராகவும் உள்ள அவர், அம்பாசமுத்திரம் தேர்தல் அலுவலகத்தில் சார்பு ஆட்சியரிடம் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், நெல்லை புறநகர் மாவட்ட கழக பொருளாளருமான முன்னாள் எம்.பி. பி. சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். மேலும், நெல்லை புறநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் கூனியூர் ப. மாடசாமி, பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஓடக்கரை ஆசீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல், மயோபதி நிறுவனர் மருத்துவர் இராமசாமி, சேரை ஒன்றிய கழகச் செயலாளர் பா. மாரிசெல்வம் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வேட்புமனு தாக்கல் நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தேர்தலில் வெற்றி பெற உறுதி மொழி எடுத்தனர். அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதி என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.






