சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 நாட்களில் 26 அடி உயர்வு

நெல்லை, ஜூன்.9 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவ லாக பெய்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக சாரல் பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 68 அடியை எட்டி 70 அடியை நெருங்குகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 89லு அடியாக உள்ளது. இந்த 2 அணைக ளுக்கும் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 285 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 4-ந்தேதி பாபநாசம் அணை நீர்மட்டம் 49 அடியாக இருந்த நிலையில் நேற்று அதாவது 4 நாட்களில் 19 அடி உயர்ந்துள்ளது. அதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 26 அடி உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் லு அடி உயர்ந்து 68லு அடியாக உள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பாபநாசத்தில் 32 மில்லிமீட்டரும், சேர்வலா றில் 28 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நகர் பகுதிகளை பொறுத்தவரை ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் லேசான சாரல் மழை பெய்தது. மாநகரில் நேற்று அதிகாலையில் சிறிது நேரம் சாரல் அடித்தது.மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணி முத்தாறு அருவியில் குளிக்க நேற்று 4-வது நாளாக தடை நீடித்தது. ஆனால் அருவியை சுற்றுலா பயணி கள் பார்வையிட அனு மதிக்கப்படுகின்றனர். அதேபோல் களக்காடு தலையணையில் குளிக்கவும், நம்பி கோவில் செல்லவும் 5-வது நாளாக அனுமதி மறுக்கப்பட்டது. கொடுமுடியாறு அணை பகுதியில் 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை அணைக ளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்கிறது. கடையம் அருகே உள்ள 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் நேற்று 2லு அடி உயர்ந்து 39 அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 5லு அடி உயர்ந்து 42 அடியாக உள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 41 அடியை கடந்துள்ளது. மிகச்சிறிய அணையான 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 28 அடியை எட்டியுள்ளது. அந்த அணைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில்38 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் மாவட்டத் தின் பெரிய அணையான அடவிநயினார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழையால் வினாடிக்கு 80 கனஅடி நீர் அந்த அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 56 அடி யாக உள்ளது. ஒரே நாளில் அணைக்கு 6 லு அடி தண்ணீர் இருப்பு உயர்ந்துள் ளது. நகர் பகுதியை பொறுத்த வரை செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் காலையில் தொடங்கி இரவு வரையிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது. அங்கு 24 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தென்காசி நகர் பகுதியில் 11 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.