அம்பையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தவெக வேட்பாளர்

நெல்லை, ஜூன்.10 – நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் தமிழக    வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராக நெல்லை தெற்கு மாவட்ட செயலாளரும்,கட்சியின் தலைமை நிர்வாக குழு உறுப்பினருமான ராஜகோபால் போட்டியிட்டு, 53 ஆயிரத்து 611வாக்குகள் பெற்றிருந்தார். அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.அந்த வகையில் அம்பாசமுத்திரம் பகுதியில் வாக்காளர் களுக்கும்,கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசுகையில், நான் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களுக்கான அடிப்படை தேவைகளுக்காக எனது பணிகள் தொடரும் என்றார்.