வீரவநல்லூர், ஜூன் 3:
முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 103வது பிறந்தநாள் விழா இன்று வீரவநல்லூரில் திமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ. சுப்பையா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதற்கட்டமாக கழக முன்னோடி இசைக்கியா பிள்ளை அண்ணா சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே சிறப்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு கலைஞரின் பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி அண்ணாதுரை, நகர செயலாளர் முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ், முன்னாள் நகர செயலாளர் அப்துல் ரகுமான், மாவட்ட தொண்டர் அணி மகளிர் அணி துணை அமைப்பாளர் தாமரைச்செல்வி, வார்டு செயலாளர் அடைக்கலம் பாலகிருஷ்ணன், கே.டி.சி. சிவா, கவுன்சிலர் சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் சமூகநீதி, கல்வி வளர்ச்சி மற்றும் தமிழ்மொழிக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.
மேலும் ஏராளமான கழக முன்னோடிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.






