|
எவெர்க்ரீன் நடிகை திரிஷா, தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார். ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து தொடர் ஹிட் படங்களை கொடுத்து வரும் திரிஷாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் மற்றொரு பக்கம் நயன்தாரா எங்கப்பா.. என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். நயன்தாராவை திரையில் பார்த்து ரொம்பா நாள் ஆச்சே என்று ரசிகர்கள் வருத்தத்து டன் உள்ளனர். இந்த நிலையில் தற்போது திரிஷா vs நயன்தாரா யார் டாப் என்ற விவாதம் இணையதளத் தில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
லேடி சூப்பர் ஸ்டார்: ‘ஐயா’ படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நயன்தாரா, ‘பில்லா’ படத்தின் மூலம் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்தார். தொடர் வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டார். அதேபோல் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி வந்த ஒரே நடிகை இவர் தான். ஒரு படத்திற்கு சுமார் 15 முதல் 18 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்து வந்தார்.
குறைந்த மார்க்கெட்: தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகையாக ஜொலித்த நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் குழந்தை, கணவர் என குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்த இவர், மற்றொரு பக்கம் படங்களிலும் நடித்து வந்தார். அதன்படி அன்னபூரணி, நயன்தாராவின் திருமண ஆவணப்படம் மற்றும் டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியாகி போதிய வரவேற்பு பெறவில்லை. தொடர் தோல்வியை தொடர்ந்து தற்போது கைவசம் 8 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நயன்தாராவை ஓவர்டேக் செய்த திரிஷா? நயன்தாராவின் மார்க்கெட் ஒருபக்கம் குறையாத் தொடங்கிய நிலையில் மற்றொரு பக்கம் திரிஷாவின் மார்க்கெட் மளமளவென உயரத்தொடங்கியது. குறிப்பாக பொன்னியின் செல்வன் இவருக்கு செம கம்பேக் கொடுத்தது. அதனை தொடர்ந்து மலையா ளத்தில் வெளியான ஐடென்டி, அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் கமலின் தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்து நயன்தாராவின் இடத்தை திரிஷா நிரப்பிக்கொண்டார்.






