வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் மிஸஸ் & மிஸ்டர்!

வனிதா விஜயகுமார் எழுதிஇயக்கி தயாரித்து  நடித்துள்ள படம் மிஸஸ் & மிஸ்டர். வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.. டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத் திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத் திருக்கிறார்.

கதை;

ராபர்ட் மற்றும் வனிதா கணவன் மனைவியாகின்றனர். கல்யாணம் ஆனவுடனே ராபர்ட் குழந்தை வேண்டும் என்று  வனிதாவிடம் சொல்ல  இப்ப குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போடுகிறார். பிறகு 40 வயதை எட்டும் வனிதா தனது வயதை  நினைத்து கவலை கொள்கிறார். அதே நேரத்தில் அவரை குழந்தை பெற்றுக் கொள்ள கன்வின்ஸ் செய்கிறார்கள். அதற்காக  கணவனிடம்  தாஜா செய்கிறார். ஆனால் ராபர்ட் தனக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். ராபர்ட் ஏன் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். வனிதா குழந்தைப் பெற்றுக் கொண்டாரா? கல்லையா?  என்பதே படத்தின் மீதிக்கதை.

வனிதா விஜயகுமாரும் ராபர்ட்டும்  கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் என ஏகப்பட்ட நட்சத்தகரங்கள் நடித்துள்ளனர். அனைவர்களும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறபாபாக நடித்துள்ளனர்.

டி.ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன், டி.ஜி. கபில் மூவரின் ஒளிப்பதிவு மடத்திற்கு பெரிய பவம். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

இயக்குநர் வனிதா விஜயகுமார் குழந்தைப் பெற்றுக் கொள்வது குறித்தும் , வயது குறித்தும் ,  பெண்களின் உளவியலை மிக எதார்த்தமான புரிதலோடு சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள்.