பணத்தை வாங்கி கொண்டு டிமிக்கி கொடுக்கும் தனுஷ்.. செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்.!

ராயன் படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், நடிகர் தனுஷ் புதிய படங்களில் கமிட்டாவதற்கு தயாரிப்பாளர் சங்கம் செக் வைத்துள்ளது.

தமிழ் தயாரிப்பாளர் சங்கம் : தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

அதன்படி, ராயன் படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வேலையில், நடிகர் தனுஷ் புதிய படங்களில் கமிட்டாவதற்கு தயாரிப்பாளர் சங்கம் செக் வைத்துள்ளது.

ஆம், நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு படங்களை முடித்துக்கொடுக்காமல், மேலும் புதிய தயாரிப்பாளர்களை அணுகுவதாக, சென்னையில் இன்று நடந்த தயாரிப்பாளர் சங்கக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே, புதிய தயாரிப்பாளர்கள் தனுஷை சந்திக்கும் முன், தயாரிப்பாளர் சங்கத்தை அணுகவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.

ஏற்கனவே, தயாரிப்பாளர்களிடம் நடிகர் தனுஷ் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள படுகிறார்கள்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *