சென்னை, ஆக.3 நடி கர் மதன் பாப் புற் று நோயால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.புற்று நோய்க்காக ஏற்கனவே
அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில்
அவர் உயிரிழந்திருக்கின்றார்.
அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தன்னுடைய தனித்துவமான சிரிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதன்பாப். அவரது குணச்சித்திர நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக அவரது கள்ளம் கபடமில்லா சிரிப்புக்கு தனி பேன்ஸ் எப்போதும் உண்டு. கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘நீங்கள்கேட்டவை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமனார் மதன் பாப். அதைத் தொடர்ந்து ‘வானமே எல்லை’,‘தேவர் மகன்’, ’நம்மவர்’, ‘மகளிர் மட்டும்’, ’சதி லீலாவது’,‘பூவே உனக்காக’, ‘நேருக்குநேர்’, ‘உன்னிடத்தில் என்னைகொடுத்தேன்’ என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் மதன் பாப் புற்றுநோயால் நேற்று காலமானார்!






