உலக நெகிழி இல்லா தினம் கொண்டாடப்பட்டது!

மாணவர்களுக்கு மஞ்சப்பை

விக்கிரமசிங்கபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளியில் உலக நெகிழி இல்லா தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி மாணவர்களுக்கு நெகிழி பை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சுற்று சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதம் குறித்தும் விளக்கினார். ஆசிரியர் ஆபேல் சேத் மாணவர் களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மேரி மேகலா, எலிசபெத் ஞான லதா, சாந்தி, நிஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்

நெகிழி எங்கும் ஆனதே …

பறவை எல்லாம் பறந்து போன
காலம் போய் சிறகை
விரித்த பறவைபோல் நெகிழி
அங்கு மிங்கும் பறக்குதே

பாய்ந்து வந்து நின்று போகும்
பள்ளம் பார்க்கும் நீரிலே
மீன்கள்இன்றிப் போனதால்
நெகிழி அங்கு நீந்துதே

சூழ்ந்து வந்த மேகம் போல்
சுழலு கின்ற காலம்
போல் மாய்ந்து நம்மைத் தாக்கவே
நெகிழி யெங்கு மானதே

மனிதன் தடுக்க மறந்திட்டால்?
மண்ணில் அது பரவிட்டால்
உலகு நெகிழி ஆகிட்டால்..?
உறவு அழிந்து போகுமே
நோய்கள் நம்மைச் சூழுமே

கிரிக்கெட்மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
விக்கிரமசிங்கபுரம்..