வாசகர் வட்டம் சார்பில் தமிழ் பேசுவோம் தமிழால் இணைவோம்.

வீரவநல்லூர் வாசகர் வட்டம் சார்பில் தமிழ் பேசுவோம் தமிழால் இணைவோம். வீரவநல்லூர் வாசகர் வட்டம் சார்பில் நேற்றுசனிக்கிழமை இரவு நூலக அரங்கில் வைத்து தமிழ் பேசுவோம் தமிழால் இணை வோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இல்யாஸ் தலைமை தாங்கினார் வாசகர் வட்ட நிர்வாகிகள் மருத்துவர்.மா. முத்து ராமலிங்கம் சொ.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாத்தி லிங்கம் வரவேற்று பேசினார் இறை தமிழ் என்ற தலைப்பில் ஐ. என். டி. யு. சி. சு. கிருஷ்ணன் இலக்கிய தமிழ் என்ற தலைப்பிலும் பாரதி கவி முற்றத் தலைவர் புலவர் கி. முத்தையாவும் இசை தமிழ் என்ற தலைப்பில்கவிஞர் க.உலகநாதனும் ம் வாசகர் வட்ட சாதனை பொன் விழா மலர் நூல் திறனாய்வு செய்து வாசகர் வட்ட பொருளாளர் ச.பெரியார் பித்தனும் உரையாற்றி னார்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்பாக்குடி. அ. முருகன் நிறை தமிழ் என்ற தலைப் பிலும் ஆழ்வார்குறிச்சி நல்லா சிரியர். மாடசாமி தமிழில் நின்று பேசுவோம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள் வட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பழனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சென்னை குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா நிறுவனத் தாரால் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாசகர் வட்ட நிர்வாகி யோகா வெங்கடேஷ் அவர்களை பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது பிடித்ததை பேசுவோம் என்ற தலைப்பில் கவுன்சிலர் அனந்த ராமன் வைரவன் பூ.பெருமாள் மீனாட்சி சுந்தரம் ஆட்டோ குமார் உட்பட பலர் பேசினார்கள் வாசகர் வட்ட செயலாளர். ரா.சந்திரசேகர் நன்றி கூறினார்