மாநிலங்­களவை தேர்­தல்: திமுக, அதிமுக வேட்­பா­ளர்­கள் போட்­டியின்றி தேர்வு!


சென்னை, ஜூன் 13 தமிழகத்தில் மாநிலங்­க­ளவை உறுப்பி­னர்­க­ளாக இருக்கும் 18 பேரில் தி.மு.க.வை சேர்ந்த வில்­சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்­திர­சே­கரன்,பா.ம.க.வை சேர்ந்த டாக்­டர் அன்பு மணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதவிக்­கா­லம் ஜூலை 24-ந்தேதியு­டன் முடி­வ­டை­கிறது.
அத­னைத் தொடர்ந்து, புதிதாக 6 மாநிலங்­க­ளவை உறுப்பி­னர்­களை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­காக வரும் 19-ந்தேதி தேர்­தல் நடை­பெ­றும் என்று தேர்­தல் ஆணையம் அறிவித்­தது. இதற்­கான வேட்புமனு தாக்­கல் கடந்த 2-ந்தேதி தொடங்­கியது.தி.மு.க.சார்பில் மக்­கள் நீதி மய்ய தலை­வர் கமல்­ஹா­சன், வில்­சன்,கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவ­லிங்கம் ஆகியோர் கடந்த 6-ந்தேதிவேட்பு மனு தாக்­கல் செய்­த­னர். அதே­போல், அ.தி.மு.க. தரப்பில் ஐ.எஸ்.இன்­ப­துரை, தன­பால் ஆகி­யோர் மனுதாக்­கல் செய்­த­னர்.மேலும்,சுயேச்­சை­கள் 7 பேரும் மனுத்­தாக்­கல் செய்­த­னர்.இந்த நிலை­யில், மாநிலங்­க­ள­வைக்கு தமிழ்­நாட்டிலிருந்து திமுக, அதிமுக, ம.நீ.ம வேட்­பாளர்­கள் 6 பேரும் போட்டியின்றி
முறை­யாகதேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர். மாநிலங்­க­ள­வைக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டுள்ள வேட்­
பாளரின் பெயர் மற்­றும் கட்சியின் பெயர் 1. ஐ.எஸ்.இன்­ப­துரை, அதி­முக, 2. கமல் ஹாசன், ம.நீ.ம 3.எஸ்.ஆர். சிவ­லிங்­கம், திமுக 4. ம. தன­பால், அதிமுக 5. ராஜாத்தி, திமுக, 6. பி. வில்­சன், திமுக.