டிராக்டருக்கு எரிபொருளினை விவசாயிகளுக்கு மானிய விலையில் தர வேண்டி கோரிக்கை!

திண்­டுக்­கல் நவ. 9 திண்­டுக்­கல் மாவட்டம் ஆத்­தூர் தாலூகா முழு­வ­தும் வட­கி­ழக்கு பரு­வ ­மழை துவங்­கி­ய­தால் நெல் விதைப்பு பணிநடைபெற்று வரு­கி­றது.இதில் விவ­சாயஉழ­வுக்கு பயன்­படுத்­தப்­படும் டிராக்­ட­ருக்கு பயன் ­ப­டுத்­தப்­படும் டீசல் விலை ஏற்­றத்­தால் தற்­போது 1 மணிநேரம் உழ­வுக்கு 1000ருபாய் வசூல் செய்­யப்­படு­கி­றது.இதனை விவ­சா­யி­கள் பயன் ­ப­டுத்­தக் ­கூ­டிய டீசல் மோட்­டார் மற்­றும் உணவு வாக­னங்­க­ளுக்கு மானிய விலை­யில் டீசல் தமி­ழக அரசு வழங்க வேண்­டும் நெல்­லின் ஆதார விலையை கூட்டவேண்­டும் என விவ­சா­யி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.