சென்னை, செப்.21;
அடுத்த மாதம் (அக்டோபர்) 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று நடிகர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
இந்த மாநாடு, நம்மை வழி நடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவும் கொண்டாடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாநாடு குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்கள் எண்ணங்களுக்கு ட்கவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடன் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது.
கழக கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெருமகிழ்வு டன் தெரிவித்துக் கொள்கிறேன்.வழிநடத்த போகும் கொள்கைகள் நமது வெற்றிக் கொள்கை மாநாடு நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவை பெருவிழாவும் கொண்டாடப்பட உள்ளது தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமைய உள்ள மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும் பாதையை அமைப்போம். இந்நிலையில் நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதாக தமிழ்நாட்டு மண்ணை சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசியையும் உரிமையுடன் கேட்கிறேன் விரைவில் சந்திப்போம் வாகை சூடுவோம். இவ்வாறு நடிகர் விஜய் கூறி உள்ளார். விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் இதை அடுத்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார் முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை கொடியின் விளக்கம் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அவர் அறிவித்தார் இதைத்தொடர்ந்து சேலம் திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையற்றனர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து இம்மாதம் 23ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது இந்நிலையில் 33 நிபந்தனைகளுடன் மாநாட்டு அனுமதி வழங்கப்பட்டது .இதற்கிடையில் முதல் மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபுடி போடப்பட்டதால் ,அதற்கான பணிகள் தொடங்காமல் இருந்தது. இதற்கிடையில் 23ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெற காவல்துறையிடம் அனுமதி பெற்றும், மாநாடு தேதி மாற்றப்பட்டது குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்று வெளியானது. லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.






