ஒரே மேடை­யில் விஜய், திருமாவ­ள­வன்? வெளி­யான பர­ப­ரப்பு தக­வல்

சென்னை, நவ.3 கடந்த மாதம் 27ம் தேதிதமிழக வெற்­றிக் கழ­கம்கட்சியின் முதல் மாநாடு நடை­பெற்­றது. இந்த மாநாட்டில் பங்­கேற்ற அக்கட்சியின் தலை­வர் விஜய்,தங்­க­ளோடு கூட்­டணிவைக்­கும் கட்சிக்கு ஆட்சி­யிலும் அதி­காரத்திலும் பங்கு அளிக்­கப்­படும் என அறிவித்து கூட்­டணிக்கு அழைப்பு விடுத்­தார்.இந்நிலை­யில் சென்­னை­யில் வரும் டிசம்­பர் 6ம் தேதி தனியார் வாரஇதழ் புத்­தக வெளியீட்டுவிழாவை நடத்த உள்­ளது.இந்த புத்­தக வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்­தை­கள் கட்சியின் தலை­வர் திருமாவ­ள­வன்,மற்­றும் தமிழக வெற்­றிக்கழ­கத்தின் தலை­வர் விஜய் ஆகிய இருவரும் ஒன்­றாகபங்­கேற்க உள்­ள­தாக தகவல் வெளியாகி உள்­ளது.அம்­பேத்­கர் நினைவு நாள் அன்று நடை­பெ­றும்புத்­தக வெளியீட்டு விழா­வில் திருமாவ­ள­வன் புத்­தகத்தை வெளியிட விஜய்புத்­த­கத்தை பெற்­றுக்கொள்­கிறார். ஏற்­கனவே திருமாவ­ள­வன் ஆட்சியி­லும் அதி­காரத் திலும்  பங்கு வேண்டும் என பேசி­யிருந்த வீடி­யோக்­களை தனது சமூக வலை­தள பக்கத்தில் வெளியிட்டிருந்­தார். இந்த வீடியோ பெரும் பேசு பொரு­ளானது.இதே­போல் விடுதலைசிறுத்­தை­கள் கட்சியின் நிர்வாகியான ஆதவ் அர்­ஜு­னும் ஆட்சி அதி­காரத்தில் பங்கு வேண்டும் என பேசி­யிருந்­தார். அவரது பேச்சு தி.மு.க. வட்­டா­ரத்தில் சல­ச­லப்பை ஏற்­படுத்தியது.ஆனால் திருமாவ­ள­வன் ஆதவ் அர்­ஜுன் பேச்­சால் தி.மு.க. கூட்­டணியில் எந்த பிரச்­ச­னை­யும் இல்லை என்று கூறியிருந்­தார்.இந்த சூழலில் தமிழக வெற்­றிக் கழ­கம் மாநாட்­டில் தி.மு.க.வை ஊழல் கப­ட­தாரி­கள் என விஜய் கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­தார்.மேலும் திராவிட மாடல் அரசு என்று கூறி மக்­கள் விரோத அரசை கொடுத்­துக் கொண்டிருக்­கிறார்­கள் என்றும் சரமா­ரியாக தாக்கி விஜய் பேசி இருந்­தார். இந்நிலை­யில் திமுககூட்­டணியில் உள்ள திரு­மாவ­ள­வன், விஜய்யு­டன் ஒரே மேடையை பகிர உள்ளது  தி.மு.க. வட்­டா­ரத்­தில் பர­ப­ரப்பை ஏற்­படுத்தி உள்­ளது.