சென்னைஅக்,21: நாடு முழுவதும் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொது மக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம்.இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளைஅறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணிநேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.மணி அதன் படி , காலை 6 – 7 மணி மற்றும் இரவு 7 – 8 வரை, குறைந்தஒலி, பட்டாசு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் குறைந்த ஒலியுடனும்,குறைந்த அளவில் காற்றுயும் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க பொது மக்கள் வேண்டும். திறந்த வெளியில் கூட்டா ஒன்று கூடி பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்டநிர்வாகம்/ உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பட்ட கூடிய இடங்களுக்கு அருகில் பட் டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு!






