சேரன்மகாதேவியில் மு. க. ஸ்டாலின் 73வது பிறந்த நாள் விழா –
அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கல்
சேரன்மகாதேவி,
மார்ச் 1, 2026:
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சேரை பேரூர் செயலாளர் மனிஷா செல்வராஜ் தலைமையில் சேரை பேருந்து நிலையம் எதிரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அபூபக்கர், மாவட்ட பொறியாளர் அணி இசக்கிமுத்து பாண்டியன், தொ.மு.ச. பொதுச் செயலாளர் கணேசன், செயலாளர் ஜெயக்குமார், கூனியூர் பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் ரத்தினம், அபுபக்கர்,வார்டு செயலாளர் சிவா, ராசு ஐஸ் பாப்பா, ராஜ், ராம், ஐயப்பன், K.Murugan BLA2, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ் (தேவிமஹால்) உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அன்வர் உசேன் தலைமையில் 40 ஆட்டோக்களில் திமுக விளம்பரப் பேனர்கள் ஒட்டி பிறந்த நாள் விழா சிறப்பிக்கப்பட்டது.விழாவில் திரளான கழகத்தினரும் பொதுமக்களும் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.






