புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு நாள் கருத்தரங்கம்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு நாள் கருத்தரங்கம்.
டிசம்பர் 6.2024 புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு நாளில் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே தேவி மஹாலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
அம்பை இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் மாசாணம் வரவேற்புரை, சேரை மாவட்ட துணை அமைப்பாளர் குமரேசன் தலைமையில், சட்டமன்றத் தொகுதி செயலாளர் டேனிஷ், மாவட்டத் துணை அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில், டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கத்தில்
விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணைச் செயலாளர் கரிசல் மு சுரேஷ், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் ஏ கே நெல்சன், மக்கள் தேசம் கட்சி மாவட்டத் தலைவர் பத்மநாபன், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் பிரபு காளிதாஸ், திமுக நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் ஆகியோர் கருத்துறை ஆற்றினர். சிறப்பு விருந்தினராக பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொருளாளர் சிவராஜ், திமுக தொண்டர் அணி சுரேஷ், ஆதிதிராவிடர் நல உரிமை சங்கம் சாலமன் ராஜன், மதிமுக மாவட்ட அமைப்பாளர் ஜெய கணேஷ், மதிமுக ஒன்றிய செயலாளர் குட்டி பாண்டியன், பத்தமடை விசிக நகர செயலாளர் நடராஜன், அம்பை பட்டு ராஜா, காலங்கரை தெரு எஸ் பி முருகன், மக்கள் தேச கட்சி டென்சிங், அப்துல்காசிப்,சமூக சேவகர் மைக்கேல், பாட்ட பாத்து செல்வராஜ், இசை செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பத்தமடை நகரச் செயலாளர் நடராஜர் நன்றி கூறினார்.