உலக கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா&-பொலிவியா
அணிகள் மோதின. இதில் அர்ஜெண்டினா 6-&0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்பிய அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.37 வயதான அவர் 3 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். மெஸ்சி 19, 84 மற்றும் 86-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மார்ட்டினஸ்(43-வது நிமிடம்) ஜூலியன் அல்வா ரெஸ் (48),தியோகோ அல்மடா (69) ஆகியோர் தலா 1கோலும் அடித்தனர்.
அர்ஜெண்டினா பெற்ற 7-வது வெற்றியாகும்.அந்த அணி 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் 4-&0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்தது. பிரேசில் 5 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஹாட்-ட்ரிக் கோல் அடித்து அசத்திய மெஸ்சி.






