திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பதட்டம்!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால், கடந்த இரண்டு மணி நேரமாக பதவிக்கும் சூழலுடன் வானில் வட்டமடித்தது. திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட இடத்திலேயே விமானம் சுற்றி வருகிறது. விமானத்தில் கிட்டத்தட்ட 141 பயணிகள் இருக்கின்றனர். எரிபொருள் நிறைந்து இருக்கும்போது தரையிறக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், எரிபொருளை குறைக்கும்பொருட்டு விமானம் புதுக்கோட்டையில் உள்ள நார்த்தாமலை சுற்றுவட்டாரப் பகுதி வானிலேயே சுற்றி வந்தது. அன்னவாசல், கீரனூர் துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை 13 முறை சம்பந்தப்பட்ட விமானம் சுற்றியுள்ளது. பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்கணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விமானம் வானில் வட்டமடித்து வந்த நிலையில் விமானம் பத்திரமாக தரையில் உரசி தரை இறக்கப்பட்டது. பயணிகள் 141 பேரும் பத்திரமாக இருப்பதாக விமான நிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்தில் குவிந்திருக்கும் உறவினர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் ஒரு திருப்தியான மனநிலைக்கு வந்திருக்கின்றனர். இருந்தாலும் விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் இன்னும் சுற்று வட்ட பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது இன்னும் பயணிகள் வெளியே வராததால் கொஞ்சம் பரிதவிப்புடன் அனைவரும் காத்திருக்கின்றனர். விமானியின் சாமர்த்தியத்தால் இந்த விமானத்தின் அடிப்பகுதி தரையில் உரசி இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.