சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை, அக்.17 சென்னை மாநகரப்பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை,எளிய மக்களுக்காக இன்றும்,நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத் து நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத்தாழ்வான பகுதிகளில் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகரசென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. மாநகரத்தின் மற்ற பகுதிகளில் இந்நிலையில், சென்னை வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும்,இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும். ” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் முன்னதாக நேற்று, எடப்பாடிபழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,“கனமழையின் காரணமாக நிவாரணமுகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும்,தாழ்வான இடங்களில் உள்ளமக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும். எனவே, ஏழை, எளிய,நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக,எங்களது ஆட்சிக் காலங்களில் மேற் கொண்டது போல்,அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் தரமான உணவை வழங்க உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்டிருந்தது கவனிக்கத்தக்கது.