கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்!

தோஹாஜூன்.24 ஈரான் அணு ஆயு­தங்கள் இஸ்­ரே­லுக்கு மிகப்பெ­ரும் அச்­சு­றுத்­த­லாக மாறும் எனக்­கூறி இஸ்­ரேல் கடந்த 13-ந் தேதி திடீ­ரென மீது தாக்­கு­தல் நடத்­தி­யது. இஸ்­ரே­லின் இந்த அதி­ர­டிக்கு ஈரா­னும் பதி­லடி கொடுத்து வரு­கி­றது.கடந்த 11நாட்­க­ளாகநடந்து வரும்இந்த மோதல்­களால் மத்­திய கிழக்­கில் பெரும் போர் பதற்­றம் நீடித்து வரு­கி­றது. இஸ்­ரேல் நடத்­திய தாக்­கு­த­லில் ஈரா­னில் இது­வரை சுமார் 950 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும்,3 ஆயி­ரத்து 450 பேர் படு­கா­யம் அடைந்­த­தா­க­வும் வாஷிங்­டனை சேர்ந்த மனிதஉரி­மை­கள் அமைப்பு தக­வல் தெரி­வித்­துள்­ளது.இந்­நி­லை­யில் இஸ்­ரேலுக்கு ஆத­ர­வாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்­ரேலின் தாக்­கு­த­லுக்கு அமெ­ரிக்கா ஆத­ரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்­டு­டன் பேச்­சு­ வார்த்தை நடத்­து­வது பலன் அளிக்­காது எனக்கூறி ஈரான் ஒதுங்கி விட்­டது. இதை தொடர்ந்து அமெ­ரிக்கா’மிட்­நைட் ஹாமர்’ என்று பெயரில் ஈரான் மீது நேர­டி­யாக தாக்­கு­தல் தொடுத்­தது.அந்த நாட்­டின் போர்டோ,நட்­டான்ஸ், இஸ்­ப­கான் ஆகிய 3 இடங்­க­ளில் உள்ள அணு­சக்தி நிலையங்­களை தாக்­கி­யது.அமெரிக்­கா­வின் குண்­டு­வீச்சுவிமா­னங்­கள், 13ஆயி­ரத்து 500 கிலோஎடை கொண்ட ‘பங்­கர்பஸ்­டர்’எனப்­ப­டும் பதுங்குகுழி அழிப்பு குண்­டு­களை வீசி பெரும் சேதத்தை ஏற்­ப­டுத்­தின.அமெ­ரிக்­காவின் இந்த தாக்­கு­த­லுக்கு கடு­மையான பதி­லடி கொடுக்­கப்ப­டும் என்று ஈரான் கூறி­யி­ருந்­தது.இந்தநிலை­யில்,கத்­தாரில் உள்ளஅமெரிக்க ராணுவ தளம் ஈரான் தாக்கு­தல் நடத்தி உள்­ளது.10 ஏவு­க­ணை­கள் வீசப்பட்ட நிலையில்,7இடை­ம­றிக்­கப்­பட்­டி­ருக்கி­றது. இருப்­பி­னும்3ஏவு­க­ணைகள் சரி­யாக இலக்கை தாக்­கி­யுள்­ளன.இது­வரை பெரிய பாதிப்பு எது­வும் இல்லை.கத்­தாரில்உள்ள அமெரிக்­கர்கள் பாது­காப்­பான இடங்க­ளுக்கு செல்­லு­மாறு அமெ­ரிக்க தூத­ர­கம் அறி­வு­றுத்தி உள்­ளது. இதை போல கத்­தார் தலை­ந­கர் தோஹா­வி­லும் குண்டு சப்­தம் கேட்­பதாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.மேற்கு ஆசிய பிராந்­தி­யத்­தில் உள்ள அமெ­ரிக்­கா­வின் மிகப்பெ­ரிய ராணுவ தள­மாக இது உள்­ளது. ஈரான் பதி­லடி தாக்­கு­தல் நடத்­திய நிலை­யில்,
டிரம்ப் இதனை உன்­னிப்­பாக கண்­கா­ணித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.தற்போதைய சூழ்­நி­லையைக்கருத்­தில் கொண்டு, கத்­தா­ரில் உள்ள இந்­தி­யர்­கள் பாது­காப்­பாக வீட்­டிற்க்குள்ளே யே இருக்க இந்திய தூத­ர­கம் கேட்­டுக் கொண்­டுள்ளது.கத்­தார் அதி­கா­ரி­கள் வழங்­கும் அறி­வு­றுத்­தல்­கள்,வழி­காட்­டு­தல்­களைப்பின் ்­பற்­றுங்­கள் என்று தூத­ர­கத்­து­டன் தொடர்­பில் இருங்­கள் என­வும் அறி­வு­றுத்­தப்பட்­டுள்­ளது.முன்­ன­தாக ஈரான் மீது அமெ­ரிக்கா இன்று இரவு தாக்­கு­தல் நடத்த இருப்­பதாக வந்த தக­வலை அடுத்து தனது வான்­பரப்பை மூடி­யதாக கத்­தார்அறி­வித்­தது.கத்­தார் தலைந­கர் தோஹா செல்­லும் அனைத்து விமா­னங்க­ளும் திருப்பி அனுப்­பப்பட்­டன.