நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி

நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து பள்ளியில் வைத்து இன்று காலை மாவட்ட அளவிலான எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த பட்டது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலகு ஏற்பாட்டில் நடந்த இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பகவதி தொடங்கி வைத்தார். பள்ளியின் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப் பாளர் ஆசிரியர் சொக்கலிங்கம் மாணவர்களை வாழ்த்தி பேசினார். போட்டி ஏற்பாடுகளை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் அமலவளவன் மற்றும் மேற்பார் வையாளர் ஜெய்குமார் செய்திருந்தனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு 5000 மற்றும் இரண்டா வது பரிசு 4000 மூன்றாவது பரிசு 3000 மாவட்ட ஆட்சியர் வழங்குகிறார்.