திருநெல்வேலி,ஆக.12:-தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட,”தமிழ்ப்புதல்வன்” திட்டம் என்னும் புதிய திட்டத்தை, உயர்கல்வியை ஊக்கப் படுத்திடும் நோக்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில்பயின்று,உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் உன்னத திட்டத்தை,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று[ஆகஸ்ட்.9] கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில்,துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த தி ட ்டத்தை ,திருநெல்வேலி பாளையஙக ோடடை யில் ,
நூறாண்டுகள் கண்ட பழைமைவாய்ந்த, தூயசவேரியார் கலை- அறிவியல் கல்லூரியில்,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில்,பாளைய ங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
மு.அப்துல்வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ,மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர்
[ சபாநாயகர்] அப்பாவு,துவக்கி வைத்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள மாணவர்களுக்கு, பணம்
பெறுவதற்கான வங்கி பரிவர்த்தன அட்டைகளை வழங்கி பேசினார்.அப்போது பேசிய அவர்,”திருநெல்வேலி
மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 69 கல்லூரிகளில் பயிலும்,6361 மாணவர்கள் பயன் பெறுவார்கள்!” என்று,குறிப்பிட்டார். இந்த நி க ழ் ச் சி யி ல் ,திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அ.ரவீந்திரன்,மாவட்ட சமூகநலசிறப்பு திட்ட செயலாக்கம்பிரிவு இணை இயக்குநர் உமாதேவி,தூய சவேரியார்
கல்லூரி தாளாளர் அருள் மு னை வ ர்ஞா.புஷ்பராஜ்,முதல்வர் அருட்தந்தை காட்வின் ரூபஸ், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் பொறுப்பு வகிக்கும் ராஜ பிரியா உட்பட பலரும்,கலந்து கொண்டனர்






