மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்தளபதி அவர்கள் முன்னிலையிலும் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களின் முன்னிலையிலும் திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மனோஜ் பாண்டியன் அவர்களின் ஆதரவாளர்கள் தங்களையும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அதன்படி திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த ஓபிஎஸ் அணி வீரவநல்லூர் பேரூர் செயலாளர்எஸ்.ஆர்.முருகானந்தம்முப்பிடாதி,மரியதாஸ்,அதிமுக மாவட்ட பிரதிநிதி சி.பி.ஆறுமுகம் ஆகியோர்களை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வீரவநல்லூர் பேரூர் செயலாளர் வீ.சுப்பையா தலைமையில், துணைச்செயலாளர் முத்துராமலிங்கம்,பொருளாளர் முத்துக்குமார்,மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை,முன்னாள் துணைச்செயலாளர்,முத்துகிருஷ்ணன்,வார்டு நிர்வாகிகள் பிச்சக்கண்ணு,சரவணன்,இசக்கியாபிள்ளை ஆகியோர் வரவேற்று இனிப்புகள் வழங்கினர்.






