பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

திருவோணம் மார்ச் 13 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பொழுது அவர்கள் தமிழகத்தில் கால்நடை மருத்துவ கல்வியை தனியார் மயமாக்குவதை தவிர்க்க வேண்டும்.

வேலையில்லா கால்நடை மருத்துவர் பட்டதாரிப்பு அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் இன்னொரு துணை மையங்கள் கால்நடை மருத்துவமனைகளாக மேம்படுத்த வேண்டும் கால்நடை வளர்ப்பு துறையில் புதிய காலிப்பணி இடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சுமார் 580 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்