கடகநேரி மாரிமுத்துவுக்கு பாராட்டு

கடகநேரி மாரிமுத்துவுக்கு பாராட்டு

ஆலங்குளம் மே ,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் கடகநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான முதியவர் மாரிமுத்து

இவர் சைக்கிளில் ஊர் ஊராக பள்ளிதோறும் சென்று தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர அபிமானியான மாரிமுத்து சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரசிகராய் ரத்ததானம் செய்து ஒரு உன்னத உயிரைக் காத்தவர்

வாழ்க்கையில் ஒருமுறையாவது தனது தலைவர் ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் கடந்த 2025 டிசம்பர் மாதம் அடைமழையில் சென்னை போயஸ் தோட்டத்திற்கு தன்னந்தனியாக காலில் செருப்பு கூட அணியாமல் கன்னியாகுமரியிலிருந்து நடந்தே சென்றார் இந்த வருடமும் சென்னைக்கு ரஜினியை காண்பதற்கு நடைபயணம் செய்ய திட்டமிட்டு வருகிறார்

ரத்ததானம், விதைப்பந்து விழிப்புணர்வு, மத நல்லிணக்கம் என மாரிமுத்து பலரையும் தமிழகமெங்கும் திரும்பிப்பார்க்க வைத்தவர்

மாரிமுத்துவைப் பாராட்டி ரஜினிகாந்த் ரத்ததானக் கழக நிறுவனர் வெங்காடம்பட்டி
பூ திருமாறன் பாராட்டுச் சான்றிதழ் வாங்கினார்

பெரிய படிப்பு, சம்பாத்தியம், பதவி, புகழ், பின்னணி எதுவும் இல்லாத மாரிமுத்து போன்று ஒரு கோடி ரஜினி பற்றாளர்கள் இன்றளவும் தமிழகத்தில் உள்ளார்கள் அதுதான் ரஜினியின்” கரையாத குறையாத வெற்றி ரகசியம் என திருமாறன் தெரிவித்தார்