தீபாவளி பண்டிகை இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட உள்ளதால், பல்வேறு மாநில அரசுகள் அதன் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அதாவது, அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் C மற்றும் D பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும், நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 8,400 முதல், அதிகபட்சம் 16,800 வரை போனஸாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்






