புதிய வகுப்­பறைகள்- விடுதி கட்டிடங்­கள்- முதல­மைச்­சர் திறந்து வைத்­தார்!

சென்னை, நவ. 9 முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செய­ல­கத்­தில், பள்­ளிக்­கல்­வித்துறை சார்­பில், 29 மாவட்­டங்­க­ளில்,141 அர­சுப்பள்­ளி­க­ளில் 171.16 கோடி ரூபாய்செல­வில் கட்­டப் ­பட்டுள்ள 754 புதிய வகுப்­பறைக்கட்­டடங்­கள், 17ஆய்­வ­கக்கட்­டடங்­கள் மற்­றும் ஒருங்­கி­ணைந்த பள்­ளிக்­கல்­வி­யின் கீழ் கஸ்­தூர்பாகாந்தி பாலிகாவித்­யா­லயா மற்­றும் நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போஸ் அவிஷ்யவித்­யாலயா உண்டு உறை­வி­டப்பள்­ளி­க­ளுக்­கான கட்­டடங்­கள் ஆகி­ய­வற்றை திறந்து வைத்­தார்.மேலும், கருணை அடிப்­ப­டை­யில் 49 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மனஆணை­களை வழங்­கி­டும் அடையாளமாக 5 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­னார்.இந்நி­கழ்ச் ­சி­யில்,அமைச்­சர்­கள் எ.வ.வேலு, பொன்­முடி,அன்­பில் மகேஸ் பொய்­யாமொழி, தலை­மைச்செய ­லாளர் முரு­கா­னந்­தம்,ஆகி­யோர் கலந்து கொண்­டனர்.முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலி­னி­டம் இன்று தலை­மைச்செய­ல­கத்­தில், அமைச்­சர்.மா.சுப்­பி­ர­ம­ணி­யன் மக்­களைத்தேடி மருத்­து­வம்’ திட்டத்­திற்கு வழங்­கப்­பட்ட ஐக்­கிய நாடு­கள் அமைப்­பின் 2024ஆம் ஆண்­டிற்­கான விருது மற்­றும் இந்திய உணவு பாது­காப்பு மற்­றும் தர நிர்­ணய ஆணை­யத்­தின் சார்­பில்உணவு பாது­காப்பு துறை­யில் மாநில உணவு பாது­காப்பு குறி­யீட்­டிற்­கான செயல்­பாட்­டில் தமிழ்­நாடு இந்­தியஅள­வில் 2வது இடம் பெற்­ற­தற்­காக வழங்­கப்­பட்ட விருது.ஆகிய 2 விரு­து­களை காண்­பித்து வாழ்த்­துப் பெற்­றார். புது­டெல்­லி­யில் நடைபெற்ற விழா­வில்,இந்திய உணவு மற்­றும் தரநிர்­ணய  ஆணை­யத்­தால் உணவு பாது­காப்புதுறை­யில் மனித வளம் மற்­றும் நிறு­வ­னங்­களைப் பற்­றிய தர­வு­கள், தர நிர்­ணய விதி­மு­றை­க­ளைப்பின்­ பற்­று­தல்,உணவுபொருட்­களைப் பரி­சோதிப்­ப­தற்­கான கட்­ட மைப்பு மற்­றும் கண்­காணிப்பு, திறன் மேம்­பாடு பயிற்சி மற்­றும் நுகர்­வோ­ருக்கு அதி­காரம் அளித்­தல் ஆகிய 5குறி­யீ­டு­க­ளின் அடிப்­படை­யில் தரமதிப்­பீடு செய்து,202324 ஆம் ஆண்­டிற்­கான மாநில உணவு பாது­காப்பு குறி­யீட்­டிற்­கான செயல்­பாட்டில் இந்­திய அள­வில் 2வது மாநி­ல­மாக, தமிழ்­நாடு தேர்வு செய்­யப்­பட்­டு  விருது வழங்­கப்­பட்டது.கடந்த 3 வரு­டங்­களாக தமிழ்­நாடு உணவு பாது­காப்­புத் துறை­யா­னது.தொடர்ந்து முதல் மூன்று இடங்­களை தக்க வைத்­துக் கொண்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.தமிழ்­நாடு அர­சுப்பணி­யாளர் தேர்­வாணை­யத்­தின் ஒருங்­கி­ணைந்த பொறி­யி­யல்பணி­கள் தேர்வு வாயி­லாக தமிழ்­நாடுகுடி­நீர்வடி­கால்வாரி­யம், பொதுப்­ப­ணித்துறை. நெடுஞ்­சாலை மற்­றும் சிறுதுறை­மு­கங்­கள்துறை,குறு, சிறு மற்­றும் நடுத்­தரத் தொழில்நிறு­வ­னங்­கள் துறை. தமிழ்­நாடு மின்உற்­பத்தி மற்­றும் பகிர்­மானக் கழ­கம் ஆகியதுறை­க­ளில் உத­விப் பொறி­யாளர் பணி­யி­டத்­திற்கு தெரிவுசெய்­யப்­பட்ட 246 நபர்­க­ளுக்கு பணிநிய­மன ஆணை­களை வழங்­கி­டும் அடை­யாளமாக 20 நபர்­க­ளுக்கு பணிநிய­மன ஆணை­களை முத­ல­மைச்­சர்.மு.க. ஸ்டாலின் வழங்­கி­னார்.