அ.தி.மு.க.வை முடக்க நினைக்கும் தி.மு.க. அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன:- எடப்பாடி பழனிசாமி!

சென்னை, செப். 22 அ.தி.மு.க.பொதுச்செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி வெளியிட்டுள்ள அறிக்­கை­யில் கூறியிருப்­பதா­வது: அமைச்­ச­ரும், சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி கொறடாவு­மான எஸ்.பி.வேலு­மணி, சென்னைமாநகராட்சி பொறியா­ளர்­கள் உள்­ளிட்ட பலர் மீது,தனியார் அமைப்பு பலஆண்­டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதார­மற்ற புகாரின் அடிப்­ப­டை­யில் தி.மு.க. அரசு, தனது லஞ்சஒழிப்புத் துறை மூலம் வழக்­குப்­பதிவு செய்துஉள்­ளது.தி.மு.க. அரசின் அமைச்­சர்­கள் மீது குற்­றப் பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்டு ஊழல் வழக்­குகள் 10 ஆண்­டுகளுக்­கும் மேலாக நடை­பெற்று வந்த நிலையில், 2021 ஆட்சிமாற்­றத்­திற்குப் பிறகு தமிழ்­நாடு லஞ்சஒழிப்புத்­துறை அடித்த அந்­தர் பல்டி­யைப் பார்த்த சென்னை உயர்நீதி­மன்றமே, தன்­னிச்­சை­யாக இவ்­வ­ழக்­குகளை மீண்டும் விசாரித்து வரு­வ­தில் இருந்தே, முத­ல­மைச்­ச­ரின் ஏவல் துறை எப்­படி செயல்­பட்டு வருகி­றது என்­ப­தைத் தமிழகமக்­கள் அனை­வ­ரும் நன்கு அறி­வார்­கள்.எஸ்.பி.வேலு­மணி உள்ளாட்சித் துறை அமைச்­சராக இருந்­த­போது,சென்னை மாநகராட்சி­யின் வளர்ச்சிக்­காக பல்வே று திட்­டங்­கள் செயல்­ ப­டுத்­தப்பட்­டன. மழை நீர் சேகரிப்பின் காரண­மாக சென்­னையின் நிலத்தடி நீர்­மட்­டம் உயர்ந்ததை  சென்னை ­மாநகர மக்­கள் நன்கு அறி­வார்­கள். அனைத்துமழைநீர் வடிகால் கால்­வாய்­களும் ­பருவமழைக்கு முனபே தூர்வாரப்­பட்­டதன் கார­ண­மாகவும், சென்னைசாலைகளில் மழை­நீர் வடி­கால் கட்­டமைப்பு அமைக்பட்ட தன் காரணமாக­வும், சென்னை சாலைகளில் மழை­நீர்தேங்கு­வது பெரிய அளவு குறைந்­தது.தி.மு.க.ஆட்சிப்பொறுப்­பேற்­றவு­டன் 2021ம் ஆண்டு பெய்த  பருவமழைக்கே சென்னை வெள்­ளத்­தில் மிதந்­தது.விரை­வில் பருவ மழையை சென்னை மாநகரம் எதிர் கொள்ள உள்ளது.40 மாத கால திமுக ஆட்சியின் ஒவ்வொரு ஆண்டும் மழை நீர் வடிகால் பணிகள் தூர் வருவதால் பணிகள் மற்றும் சாலைகளை சீரமைத்தல் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாக கூறும் தங்களது வேஷம்கலைந்து விடுமோ என்றும், திமுக ஆட்சியின் மீது கூறப்படும் 4 ஆயிரம் கோடி ரூபாய் பற்றிய புகார்கள் மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்படுமோ தங்களின் ஊழல்கள் அம்பலப்பட்டு விடுமோ என்ற பயம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, உள்ளிட்ட அரசின் அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்வு உணவு பொருட்கள் கட்டுமான பொருட்கள் கடுமையான விலை உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு,கொலை,கொள்ளை, கள்ளச்சாராயம் தமிழகத்தை கஞ்சா மட்டும் போதை ப்பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை என்று திமுக அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்கள் கவனத்திற்கு தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்பு துறையை ஏவி விட்டிருக்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்.இது போன்ற தகிடுதத்தங்களால் அனைத்திந்திய அண்ணா திமுகவை முடக்கி விடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார் திமுக ஆட்சியின் ஆயுட்காலம் 19 அம்மாவாசைகள் தான் நாட்கள் எண் ப்படுகின்றன. சர்வதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.