ஜெய் பீம்
06.12.25
பத்தமடை, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எங்களின் குலதெய்வம், மாபெரும் சகாப்தம் ,டாக்டர் பாபாசாகிப் ,அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளை ஒட்டி அவரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனை அடுத்து அம்பேத்கர் நகரில் அமைந்திருக்கும் திருவுருவப்படத்திற்கும் மற்றும் பத்தமடை பேரூராட்சி மன்றத்தில் இருக்கும் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பத்தமடை நகரச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார், சேரை ஒன்றிய செயலாளர் வே.மாதவன் முன்னிலை வகித்தார்,பத்தமடை நகர துணைச் செயலாளர் வி.சாமுவேல் வரவேற்புரை ஆற்றினார், பத்தமடை நகரப் பொருளாளர் ரா. முருகன், சேரை ஒன்றிய செயற்குழு
உறுப்பினர் சுந்தர், ஒர்க் ஷாப் ஆறுமுகம், இன்பராஜ், பத்தமடை பேரூராட்சி மன்ற தலைவி அபிதா ஜமால்தீன் கருத்துரை ஆற்றினார், ஜமால்தீன்,பத்தமடை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கரிசூல்தான், ஆனந்த் தங்கராஜன்,பத்தமடை நகர துணைச் செயலாளர் S.P.N. கன்சா மைதீன் நன்றி உரையாற்றினார் மற்றும் பேரூராட்சி மன்ற நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இதய அஞ்சலி செலுத்தினர்.






