10 மாநிலங்­களில் விரைவில் கவர்­னர்­களை மாற்ற மத்திய அரசு முடிவு!

புது­டெல்லி, அக்.18 இந்­தி­யா­வில் பல மாநி­லங்­க­ளில் கவர்­னர்­க­ளின் 5 ஆண்டு பத­விக்­கா­லம் நிறைவு பெற்­றி­ருக்­கி­றது.சில மாநி­லங்­க­ளில் கவர்னர்­கள் 3 ஆண்­டு­க­ளுக்கு மேலாக பத­வி­யில் இருக்கி­றார்­கள்.இத­னால் பல மாநி­லங்க­ளுக்கு புதிய கவர்­னர்களை தேர்வு செய்து நிய­மிக்க வேண்­டிய சூழ்­நிலை உரு­வாகி இருக்­கி­றது.இது தொடர்பாக மத்­திய அரசு தீவி­ர­மாக ஆலோசனை நடத்தி வரு­கி­றது.பா.ஜ.க. ஆளும் உத்­த­ர­பி­ர­தேசத்­தில் கவர்­ன­ராக இருக்­கும் அனந்தி பென்படேல் பதவி காலம் 5 ஆ ண்­டு­கள்முடிந்­துள்­ளது.அது­போல கேர­ளா­வில் கவர்ன­ராக இருக்­கும் ஆரிப்முக­மது கான் பதவி கால­மும் 5 ஆண்­டு­கள் நிறைவு பெற்­றுள்­ளது. அது­போல யூனி­யன்பிர­தேசங்­க­ளான காஷ்­மீர், அந்­த­மான், டாமன்டையூ,தாதர் ஆகி­ய­வற்­றி­லும் கவர்­னர்­க­ளின்பதவிகாலம் 3 ஆண்­டு­களை கடந்­துள்­ளது.தமிழ்­நாடு, கோவா, கர்­நா­டகா,குஜ­ராத், அரி­யானா, மத்­திய பிர­தேசம், உத்­த­ர­காண்ட் ஆகியமாநி­லங்­க­ளி­லும் கவர்­னர்­கள் 3 ஆண்­டு­க­ளுக்கு மேல்பத­வி­யில் உள்­ளனர். 10-க்கும் மேற்­பட்ட மாநி­லங்­க­ளில் கவர்­னர்கள் 3 முதல் 5 ஆண்­டு­களுக்­கும் மேலாக பத­வி­யில்  இருப்­பதால் அவர்­களை மாற்ற மத்­திய அரசுதீர்மா­னித்­துள்­ளது. பெரும்­பா­லான கவர்­னர்கள்   வீட்­டுக்கு  அனுப்ப முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. சிலமாநி­லங்­க­ளில் 3 ஆண்­டு­களை கடந்­துள்ள கவர்­னர் க­ளின் செயல்­பா­டு­கள் மத்­தியஅர­சுக்கு திருப்தி அளித்­துள்­ளன.அவர்களை தற்­போதைய மாநி­லத்­தில் இருந்து வேறு மாநி­லத்­துக்கு இடம்மாற்­றம் செய்ய மத்­தியஅரசு பரி­சீ­லனை செய்து வரு­கி­றது.தமி­ழக கவர்­னர் ஆர்.என்.ரவி பொறுப்­பேற்று 3 ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆகி­றது. எனவே கவர்­னர்­கள் மாற்­றத்­தின் போது தமி­ழக கவர்­னர் ரவி­யும் இடம்­மாற்­றம் செய்­யப்­பட வாய்ப்­பு­கள் இருப்­பதாக டெல்லி வட்­டார தகவல்­கள் தெரி­விக்கின்­றன.காஷ்­மீர் யூனி­யன் பிர­தேச சட்­டசபை தேர்­தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்­றி­ பெற்று ஆட்­சியை அமைத்­துள்­ளது. உமர்அப்­துல்லா கொடுக்­கப் ­போ­வ­தாக பிர­த­மர்மோடி தலைமை­யி­லான ஆட்­சிக்கு முழு ஆத­ரவு அறி­வித்­துள்­ளார். அதன்படி காஷ்­மீ­ருக்கு விரைவில் மாநில அந்­தஸ்து கொடுக்­கப்­ப­டும் என்று எதிர் ­பார்க்­கப்­ப­டு­கி­றது.அத்­தகைய சூழ்­நி­லை­யில் காஷ்­மீ­ருக்கு புதிய கவர்­னரை நிய­மிக்க பிர­த­மர் மோடிதிட்­ட­மிட்­டுள்­ளார் .தற்­போது அங்கு கவர்­ன­ராக இருக்­கும் மனோஜ்சின்கா 4 ஆண்­டு­க­ளுக்கு மேல் பத­வி­யில் இருக்­கி­றார்.மனோஜ் சின்­கா­வுக்கு பதில் புதிய கவர்­ன­ராக பா.ஜ.க.முன்­னாள் தேசிய பொதுச்­செ­ய­லா­ளர் ராம் மாதவை கவர்­ன­ராக நிய­ம­னம் செய்ய ஆலோசனை நடந்து வரு­கி­றது.இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்­பு­டன் நெருங்­கிய தொடர்பு உடை­ய­வர்.சில மாநில சட்­டசபை தேர்­தல்­க­ளில் பா.ஜ.க வெற்­றிக்கு அடித்­தளம் அமைத்து கொடுத்­த­வர்.இத­னால் அவ­ருக்கு கவர்­னர் பதவி வழங்க பிர­த­மர் மோடி முடிவு  செய்­தி­ருப்­ப­தாக தெரியவந்­துள்­ளது.கேர­ளா­வில் தற்­போது கவர்­ன­ராக இருக்­கும்.ஆரிப் முக­மது கான் 5ஆண்­டு­களை நிறைவு செய்­தி­ருப்­ப­தால் அவ­ருக்கு மத்­திய அரசு வேறு புதியபணியை ஒதுக்க தீர்மா­னித்­துள்­ளது.அவ­ருக்கு பதில் அந்­த­மான் தீவுகவர்­னர் தேவேந்­திரகுமார் கேர­ளா­வின்புதியகவர்­ன­ராக மாற்­றப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கி­றது.அது­போல கர்­நா­டகாகவர்­னர் கெலாட், குஜ­ராத் கவர்­னர் ஆச்­சா­ரியாதேவ்­ரத். கோவா கவர்­னர் ஸ்ரீத­ரன் பிள்ளை, அரி­யானா கவர்­னர் பண்­டாருதத்­தாத்­ரேயா, மத்­திய பிர­தேச கவர்­னர் மங்­கு­பாய்படேல், உத்­த­ர­காண்ட்கவர்­னர் குர்­மித்­சிங் ஆகி­யோ­ரும் வேறு மாநி­லங்க­ளுக்கு மாற்­றப்­படவாய்ப்பு உள்­ளது. புதிய கவர்­னர்­கள் நிய­ம­னம் மற்­றும் இட­மாற்­றம் இந்த மாத இறு­தி­யில் அல்­லது அடுத்த மாதம் நடை­பெ­றும் என்று தெரி­கி­றது.மகா­ராஷ்­டிரா,ஜார்­கண்ட் தேர்­தல் முடிந்த பிறகு கவர்­னர்கள் மாற்­றம் நடை­பெறலாம்என்­றும்கூறப்­ப­டு­கி­றது.கவர்­னர்­கள் மாற்­றம் தொடர்­பாக மத்­திய அரசு ஆலோ­சிக்க தொடங்கி இருப்­ப­தால் பா.ஜ.க.மூத்த தலை­வர்­க­ளி­டம் கவர்­னர் பத­வியை பெறகடும் போட்டி ஏற்­பட்­டுள்­ளது.பா.ஜ.க.முன்­னாள் எம்.பி.க்கள் அஸ்­வினி துபே, வி.கே.சிங், முக்­தார் அப்­பாஸ்நக்வி ஆகி­யோ­ரது பெயர்­கள் புதிய கவர்­னர்கள் பத­விக்கு அடி­ப­டு­கி­றது.