தாமரைப்பாக்கம் அருகே வண்டை விழுங்கிய 1வயது பெண் குழந்தை உயிரிழப்பு!

பொன்னேரி, ஆகஸ்ட் 26- திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை, தரையில் இருந்த வண்டை விழுங்கியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் தனது குடும்பத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக தாமரைப் பக்கத்தில் வசித்து வருகிறார். அவருக்கு குதியாசன் (3), குகஸ்ரீ (1) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று சிறுமி குகஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தரையில் இருந்த வண்டை எடுத்து விழுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை தொடர்ந்து அழத் தொடங்கியதால், பெற்றோர் முதலில் தனியார் மருத்துவ மனைக்கும் பின்னர் திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்,ஆனால் மருத்துவர்கள் குழந்தை வழியிலேயே உயிரிழந்த தாக தெரிவித்தனர். ஆரம்பத்தில் முறுக்கு சாப்பிட்டதால் தொண்டையில் சிக்கியிருக்கலாம். என பெற்றோர் நினைத்த நிலையில் பிரேத பரிசோதனையில் மூச்சு குழாயில் வண்டு கடித்தது தான் காரணம் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர், வெ வெங்கல் காவல்துறை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. ஒரு வயது குழந்தை வண்டை விழுங்கி உயிரிழந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.