சேரன்மாதேவியில் 39-வது முறையாக பாத சிகிச்சை மற்றும் இலவச தெரபி முகாம் – நவம்பர் 2 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது!

சேரன்மாதேவியில் 39-வது முறையாக பாத சிகிச்சை மற்றும் இலவச தெரபி முகாம் – நவம்பர் 2 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது!
சேரன்மாதேவி குத்தபா முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் நெல்லை ஹெல்த்தி லைஃப் வெல்வெல் சென்டர் இணைந்து நடத்தும் 39-வது முறையான பாத சிகிச்சை மற்றும் இலவச தெரபி முகாம் சேரன்மாதேவியில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 4D பல்ஸ் தெரபி, லேசர் தெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சர்க்கரை நோய், பாத வலி, பாத எரிச்சல், பாத மரத்துப்போதல், காலில் நரம்பு சுருண்டு இருத்தல், தசை வலி, தசைப் பிடிப்பு, தசை வீக்கம், மூட்டு வலி, கைதரிப்பு, இரத்த சோகை, கீழ்வாதம், ஆஸ்துமா, மன இறுக்கம், மனச்சோர்வு, மூலநோய், வெள்ளைப்படுதல், மாதவிடாய் பிரச்சினைகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள், PCOD / PCOS, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், மலச்சிக்கல், சிறுநீரகக் கல், தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தெரபி சிகிச்சைகள் குறித்து முகாமில் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வருகிற 02.11.2026 முதல் 16.11.2026 வரை தொடர்ந்து 15 நாட்கள் முகாம் நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும். ஒரு நபருக்கு 30 நிமிடங்கள் மட்டுமே சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
99940 31910, 93637 62944.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முகாம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.