’வெற்றி பயணம் திட்டத்தால்’ வாழ்வாதாரம் பாதிப்பு
சேரன்மகாதேவியில் இன்று ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்
சேரன்மகாதேவி , அக். 15-சேரன்மகா தேவியில் வெற்றி பயணம் திட்டத் தால் வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ தொழி லாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெற்றி பயணம் திட்டம் மூலம் தனியார் பஸ்கள் மற்றும் வாடகை கார் ஆட்டோ தொழிலாளர்கள் லட்சக்கணக்கா னோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் அரசு போக்குவ ரத்து கழகமும் கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளது. இத்திட்டத் தால் வரும் காலங்களில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம், சம்பள உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவை கள் பாதிக்கப்படும் என ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சேரன்ம காதேவியில் இன்று ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வை வலியுறுத்தியும்,
வெற்றி பயணத்தால் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பை அரசு சரி செய்து தர வேண்டியும் ஆட்டோ தொழிலாளர்கள் இன்று ஒரு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி சேரன்மகாதேவி பஸ் ஸ்டான்ட் அருகில் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை வரிசையாக போக்குவரத்திற்கு இடையூறின்றி நிறுத்தி தங்களது எதிர்ப்புகனை நூதன முறையில் பதிவு செய்தனர்.






