சேரன்மகாதேவி, ஜூன் 29:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 28.06.2026 அன்று மாலை சேரன்மகாதேவியில் உள்ள தேவி மகாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பே. பாஸ்கர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் மாதவன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயலாளர் மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை பொறுப்பாளர் கரிசல் மு. சுரேஷ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில பொறுப்பாளர் ஆர். மாதவி, மண்டல துணைச் செயலாளர் மு. முத்துவளவன், மாவட்டப் பொருளாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் மாசான வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் வரவிருக்கும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும் மேளவளவு போராளிகள் நினைவு நாள் அனுசரிப்பு, ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் விருதுகள் வழங்கும் விழா, ஜூலை 17-ஆம் தேதி தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெறும் தென் மண்டல செயற்குழு கூட்டம் மற்றும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கான களப்பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.

மேலும், ஜூலை 23-ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தை சிறப்பாக அனுசரிப்பது, ஜூலை 26-ஆம் தேதி தலைவர் தலைமையில் நடைபெறும் களக்காடு புரட்சியாளர் சிலை திறப்பு விழாவில் பெருமளவில் பங்கேற்பது, ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறும் தமிழர் எழுச்சி நாள் மற்றும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டு நிதிக்காக ரூ.1 லட்சம் வழங்குவதற்கும் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர அளவிலான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் திரளாகக் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றினர்.
முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஷ் பிரபு நன்றியுரை வழங்கினார்.






