பிரான்சேரியில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி ஊரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுப்புடாதி அம்மன், ஸ்ரீசந்தனமாரியம்மன், ஸ்ரீஉச்சினி மாகாளியம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் திருவிழா இன்று பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருவிழாவை முன்னிட்டு காலை முதலே யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்களுடன் ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு, கோபுரங்களின் மீது மற்றும் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

 

இவ்விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் இசக்கிசுப்பையா அவர்கள் மற்றும் திருமதி டாக்டர் மீனாட்சி சுப்பையா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழா நிறைவாக பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றனர்.

மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ஊராட்சி மக்களாலும், கோவில் நிர்வாகத்தினராலும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.