வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் பங்கேற்பு

அருள்தரும் மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை கோலாகலம்

வீரவநல்லூர், மே 31:

வீரவநல்லூர் அருகே அமைந்துள்ள அருள்தரும் மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோவிலில், குத்துவிளக்கு பூஜை ஸ்பெஷல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (31.05.2026) மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

குமுதம் பக்தி ஸ்பெஷல் வழங்கும் திருவிளக்கு பூஜை இணைந்து போத்தீஸ் ஸ்வர்ண மஹால் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தவர்கள் அருள் தரும் பூமிநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் திருமதி மாடத்தி, மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் N. பருவத ராணி , பேராசிரியர் செல்வி டாக்டர் கலையரசி, திருமதி புவனேஸ்வரி இசக்கி கண்ணன், திருமதி ஜோதிடர் இந்திரா, திருவிளக்கு பூஜை நடத்தி சிறப்பு செய்தவர் எஸ் .பி .ராமர் ஆசிரியர் மற்றும் பக்தர்கள் ஒருங்கிணைப்பு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வீரவநல்லூர் திரு தொண்டர்கள் உழவாரப் பணி தொண்டர்கள் சீதாராமன், பாலமுருகன், வீரக்குமார், தளவாய், சுந்தரி அம்மா, பேச்சியப்பன் .மணிகண்டன் ,மாணிக்கம் ,திருமதி ரெஜினா ,அமுதா ,கலையரசி ,சாந்தி ,வனிதா, சிவகார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் குடும்ப நலன், கல்வி முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, திருமண வரம், மகப்பேறு, நோய் நீக்கம், மன அமைதி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் இறைவனை பிரார்த்தனை செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரவநல்லூர் கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து ஆன்மிக அருள் பெற்றனர்.