அம்பையில் மக்கள் சட்ட உரிமை கழக மாதாந்திர கூட்டம்

அம்பையில் மக்கள் சட்ட உரிமை கழக மாதாந்திர கூட்டம்

அம்பை, ஏப்.5:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் மக்கள் சட்ட உரிமை கழகத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு டி.பி. கணேசன் தலைமை தாங்கினார். ஜி. முத்துக் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர். பேச்சிமுத்து மற்றும் அருணாசலம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். வருகிற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், அம்பாசமுத்திரம் புதிய அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் எளிதில் சென்று வர போக்குவரத்து வசதி ஏற்படுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், அகத்தீஸ்வரர் திருக்கோவில் எட்டாம் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இதனுடன் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தின் நிறைவில் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.