அம்பாசமுத்திரம் அருகே வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், SST-1 குழுவினர் வாகன தணிக்கையின் போது ரூ.1.15 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் SST-1 குழுவின் இன்சார்ஜ் திரு. முருகன் (BDO, அம்பை), காவல்துறை அதிகாரி அய்யம்பெருமாள் (HC 3366) மற்றும் ராஜா ஆகியோர் மன்னார்கோவில் விக்கில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது TN97W5114 பதிவு எண் கொண்ட பாலேனோ (Baleno) காரை சோதனை செய்தனர்.
அந்த காரில் பயணம் செய்த வைராவிகுளம் பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி (47), தந்தை பெயர் ராட்சமுத்து, ஆம்பூரிலிருந்து அம்பாசமுத்திரம் நோக்கி வந்தவர் என தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், முறையான ஆவணங்கள் இன்றி ரூ.1,15,000 (ஒரு லட்சத்து பதினைந்து ஆயிரம்) பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் உதவி நடத்தல் அதிகாரி மற்றும் அம்பாசமுத்திரம் தாசில்தார் திரு. வைகுண்டம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.